500க்கு மேற்பட்டோர் பாடிய கந்த சஷ்டி கவச பாராயணம்
500க்கு மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு பாடிய கந்த சஷ்டி கவச பாராயணம் திண்டுக்கல் அபிராமி அம்மன் கோவிலில் நடைபெற்றது;
திண்டுக்கல் மாநகரின் மையப் பகுதியில் பிரசித்தி பெற்ற பழமை வாய்ந்த ஞானாம்பிகை உடனுறை காளத்தீஸ்வரர் அபிராமி அம்மன், உடனுறை பத்மகிரீஸ்வரர் ஆலயம் உள்ளது இக்கோவில் வளாகத்தில் வள்ளி தேவசேனா சமேத சண்முகநாதர் சன்னதி உள்ளது. இங்கு கடந்த 21ம் தேதி கந்த சஷ்டி திருவிழா காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. கோவில் குருக்கள் தலைமையில் கோவில் வளாகத்தில் யாகம் வளர்க்கப்பட்டு உற்சவ மூர்த்தி 22ம் தேதி கேடயத்தில் சுவாமி புறப்பாடும் 23ம் தேதி ஆட்டுக்கிடாய் வாகனத்திலும் 24ம் தேதி மயில் வாகனத்திலும் 25ம் தேதி குதிரை வாகனத்தில் முருகப்பெருமான் நகரின் முக்கிய வீதிகள் வழியாக வீதி உலா நடைபெற்றது. கந்த சஷ்டி பெருவிழாவின் நான்காம் நாளில் கோவில் வளாகத்தில் 500 க்கும் மேற்பட்ட பெண்கள் கந்த சஷ்டி பாராயண நிகழ்ச்சி நடைபெற்றது. கோவிலில் அபிராமி அந்தாதி பாடும் வாணி , லலிதா, கோமளவல்லி சரஸ்வதி ஹேமா ராஜம் சியாமளா பானுமதி உள்ளிட்டோர் கந்த சஸ்டி பாராயணம் பாட தொடர்ந்து 500க்கும் மேற்ப்பட்ட பெண்கள் 35 நிமிடங்கள் பாராயணம் செய்தனர் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பெண்களுக்கு பச்சை வஸ்திரம் திணைமாவு உள்ளிட்ட பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இந்த கந்த சஷ்டி பாராயணம் நிகழ்ச்சிக்கு அபிராமி அம்மன் கோயில் முன்னாள் அறங்காவலர் குழு வீரக்குமார் நிர்வாகி அபிராமி அம்மன் கோவில் செயல் அலுவலர் தங்கலதா உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்.