சேலம் ஏ.பி.மெடிக்கல் சென்டரின் 6-ம் ஆண்டு தொடக்க விழா

சேலம் ஏ.பி.மெடிக்கல் சென்டரின் 6-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.

Update: 2024-06-16 04:46 GMT

சேலம் ஏ.பி.மெடிக்கல் சென்டரின் 6-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது.


சேலம் அழகாபுரம் சாரதா காலேஜ் மெயின் ரோட்டில் உள்ள ஏ.பி. மெடிக்கல் சென்டரின் 6-ம் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. விழாவில் குடல் அறுவை சிகிச்சை மற்றும் பொது அறுவை சிகிச்சை நிபுணர் சங்கர் நாராயணன், மகப்பேறு மற்றும் குழந்தையின்மை டாக்டர் கிரணா செல்வி, நிர்வாக இயக்குனர்கள், டாக்டர்கள் மற்றும் அலுவலக பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

பின்னர் நிர்வாக இயக்குனர் சங்கர் நாராயணன் கூறும்போது, ஏ.பி. மெடிக்கல் சென்டர் பல்நோக்கு மருத்துவமனையாக செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் சேலம் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நோயாளிகள் அதிக அளவில் சிகிச்சை பெற்று பயனடைத்துள்ளனர். இங்கு எண்டோஸ்கோபி, லேப்ராஸ்கோபி, இ.சி.ஜி., எக்கோ, ஹைடெக் ஏ.சி. ரூம், வென்டிலேட்டர், 24 மணி தேர மருந்தகம், 24 மணி நேர அவசர சிகிச்சை மற்றும் ஆம்புலன்ஸ் வசதிகள் உள்ளன.

மேலும் பொது மருத்துவம், குழந்தைகள் நல மருத்துவம், மகப்பேறு மற்றும் பெண்கள் நல மருத்துவம், எலும்பு மூட்டு அறுவை சிகிச்சை போன்ற பிரிவுகளில் மருத்துவ நிபுணர்கள் சிறந்த சிகிச்சை அளித்து வருகின்றனர் என கூறினார்.

Tags:    

Similar News