80 வயது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக 86 வயது கணவர் போலீசில் புகார்

குமாரபாளையத்தில் 80 வயது மனைவி சாவில் சந்தேகம் இருப்பதாக 86 வயது கணவர் போலீசில் புகார் செய்துள்ளார்.;

Update: 2025-12-04 14:32 GMT
குமாரபாளையம் பெராந்தர்காடு பகுதியில் வசித்து வருபவர் ஜெயமணி, 80. இவர் தன மூத்த மகன் பாலசுப்ரமணியுடன் வாழ்ந்து வருகிறார். இவரது கணவர் ராமலிங்கம், 86. ஓய்வு பெற்ற அஞ்சல் துறை ஊழியர். இவர் தன் இளைய மகன் கணேசன் உடன் வசித்து வருகிறார். பாலசுப்ரமணி தன மனைவியை சரிவர பராமரிக்காமல் அடித்து துன்புறுத்துவதாக, நாமக்கல் எஸ்.பி. வசம் ஏற்கனவே புகார் மனு கொடுத்துள்ளார். சில நாட்களாக தன மனைவி ஜெயமணி வெளியில் வராமல் இருந்த நிலையில், நேற்று தன் மனைவி இறந்து விட்டதாக தகவல் அறிந்தார். நேரில் சென்று பார்த்த போது, தன் மனைவியின் மூக்கில் ரத்தம் வந்துள்ளதால், மனைவியின் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், மூத்த மகன் பாலசுப்ரமணி மீது நடவடிக்கை எடுக்க வேண்டியும் குமாரபாளையம் போலீசில் ராமலிங்கம் புகார் செய்துள்ளார். இது குறித்து குமாரபாளையம் போலீசார் விசாரணை செய்து வருகிறார்கள்.

Similar News