உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த பணம் பறிமுதல்!

திருப்பத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 9லட்சத்து 32 ஆயிரத்து 400ரூபாய் பறிமுதல்! பறக்கும் படையினர் கைப்பற்றினர்.

Update: 2024-03-18 09:25 GMT

பணம் பறிமுதல்

திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அருகே உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு வந்த 9லட்சத்து 32 ஆயிரத்து 400ரூபாய் பறிமுதல்! பறக்கும் படையினர் கைப்பற்றினர். 2024 ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து தேர்தல் விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளது. அதன் காரணமாக ஏதேனும் பணக்கடத்தல் சம்பவம் நடைபெறுகிறதா? என பறக்கும் படையினர் ஆங்காங்கே வாகன சோதனைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் திருப்பத்தூர் அடுத்த வெங்களாபுரம் பகுதியில் பகுதியில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை ஈடுபட்டிருந்தனர். அப்போது திருப்பத்தூர் மாவட்டம் திம்மனாமுத்தூர் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (40) என்பவர் வீடு கட்ட வாங்கிய கடனை திருப்பிக் கொடுக்க பர்கூர் வரை சீட்டு எடுத்த பணம் 9 லட்சத்து 32ஆயிரத்து 400 ரூபாய் எடுத்துச் சென்றுள்ளார். அப்போது உரிய ஆவணம் இன்றி காரில் எடுத்து சென்ற 9லட்சத்து 32ஆயிரத்து 400ரூபாய் வைத்திருந்தார் அப்போது சோதனையில் ஈடுபட்ட தோட்டக்கலை உதவி இயக்குனர் வினோதினி தலைமையிலான பறக்கும் படையினர் பணத்தை கைப்பற்றினர். மேலும் கைப்பற்றப்பட்ட பணத்தை உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் அனந்தகிருஷ்ணனிடம் வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒப்படைத்தனர். அதன் பின்பு மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் முன்னிலையில் சார்நிலை கருவூலத்தில் ஒப்படைத்தனர்.
Tags:    

Similar News