பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் அழைப்பு

ஊத்தங்கரை வட்டத்தில் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

Update: 2024-01-22 10:11 GMT

வேளாண் உதவி இயக்குனர்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை வட்டாரத்தில் நடப்பு நவரை பட்டத்தில் பயிரிட்டுள்ள நெல் பயிருக்கு, பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு வேளாண்மை உதவி இயக்குநர் கருப்பையா அழைப்பு விடுத்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில். சிங்காரப்பேட்டை மற்றும் கல்லாவி பிர்காவில் உள்ள, கிராமங்களில் இயற்கை இடர்பாடுகளால் ஏற்படும் பயிர் சேத இழப்புகளை ஈடுசெய்ய நவரை பட்டத்தில் நெல் பயிரிட்டுள்ள விவசாயிகள்.

இத்திட்டத்தில் பயன்பெற தங்களது, சிட்டா, ஆதார் அட்டை, அடங்கல், வங்கி புத்தக நகல், பாஸ்போர்ட் சைஸ் போட்டோ ஆகிய ஆவணங்களுடன் பிரிமீயம் தொகையான ஏக்கருக்கு ரூ.550.50 }கட்டணத்தை வரும் ஜனவரி 31ம் தேதிக்குள் செலுத்தி பயிர் காப்பீட்டு தொகை ரூ.36,700 பெற்று பயன்பெறுமாறு கேட்டுக்கொண்டார். இத்திட்டத்தின் கீழ் பயிர் கடன் பெறும் விவசாயிகள் மற்றும் கடன் பெறா விவசாயிகள் இப்கோ டோக்கியோ ஜெனரல் இன்சூரன்ஸ் நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட முகவர்கள் மூலமாகவோ, அல்லது பொது சேவை மையங்களான மக்கள் கணினி மையங்கள் மூலமாகவோ, அல்லது தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மூலமாகவோ அல்லது தொடக்க வேளாண்மை,கூட்டுறவு சொசைட்டி மூலமாகவோ தங்கள் விருப்பத்தின் பேரில் பிரிமீயம் தொகை செலுத்தி பதிவு செய்து கொள்ளலாம்.

விதைப்பு முதல் அறுவடை வரை ஏற்படும் இழப்புகளுக்கு, பிர்கா வாரியாக பயிர் அறுவடை பரிசோதனை செய்து இழப்பீட்டின் அளவை கணித்து, பயிர் காப்பீட்டு தொகை வழங்கப்படும் என தெரிவித்தார்.

Tags:    

Similar News