குடிபோதையில் வாகனம் இயக்கியதாக ஒரேநாளில் 38பேர் மீது வழக்கு
By : King 24X7 News (B)
Update: 2023-11-05 09:19 GMT
கோப்பு படம்
திருவாரூர் மாவட்டத்தில் மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டியதாக திருவாரூர் பகுதியில் பத்து வழக்குகள் ,நன்னிலம் பகுதியில் ஐந்து வழக்குகள் ,மன்னார்குடி பகுதியில் 17 வழக்குகள், திருத்துறைப்பூண்டி பகுதியில் நான்கு வழக்குகள், முத்துப்பேட்டை பகுதியில் இரண்டு விழக்குகள் என மொத்தம் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுவரை குடித்துவிட்டு வாகனம் ஓட்டியவர்கள் மீது 1398 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. குடித்துவிட்டு வாகனம் ஓட்டுபவர்கள் அதிவேகமாக வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என எஸ்பி தெரிவித்துள்ளார்.