முத்துப்பேட்டை அருகே பெண்ணை திட்டியதால் 3பேர் மீது வழக்கு பதிவு
முத்துப்பேட்டை அருகே பெண்ணை திட்டியதால் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;
By : King 24X7 News (B)
Update: 2023-12-14 10:28 GMT
கோப்பு படம்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை அருகில் தில்லைவிளாகம் கோவில் அருகே வீரையன் என்பவரின் மனைவி செல்வராணி வயது 45. இவரை தில்லை விளாகம் தெற்கு பகுதியை சேர்ந்த வீரையன் என்பவரின் மகன் தீபக், கோவிலடி பகுதியைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி மகன் ஈஸ்வரன் ,தில்லை எடையார் காடு பகுதியைச் சேர்ந்த கலைச்செல்வன் என்பவரின் மகன் ஹரிஹரன் ஆகியோர் செல்வராணியை தரக்குறைவாக திட்டியதாக கூறப்படுகிறது .
இது குறித்து செல்வராணி முத்துப்பேட்டை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து மூன்று பேரையும் போலீசார் தேடி வருகின்றனர்.