குடிபோதையில் காரை ஓட்டிவர் மீது வழக்கு பதிவு

குடிபோதையில் காரை ஓட்டிவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.;

Update: 2023-12-29 13:25 GMT

விபத்து ஏற்படுத்திய கார்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரம் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி முன்பு சின்னசேலம் வட்டம் வீர பயங்கரம் கிராமத்தைச் சேர்ந்த துரைசாமி மகன் பாலமுருகன் என்பவர் சங்கரா புறத்தில் ஜூஸ் கடை நடத்தி வருகிறார்.

அவர் மது போதையில் காரை தாறுமாறாக ஓட்டி வந்து பொதுமக்கள் மேல் இடித்து பெரும் விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இந்த விபத்தில் மங்கலம் கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை விஜய வள்ளி அருண்குமார் ஐஸ்வர்யா ஆகிய நால்வருக்கு பலத்த காயம் ஏற்பட்டு சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறனர்.

Advertisement

இது சம்பந்தமாக சங்கராபுரம் காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்த பின் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவலர்கள் காரை இயக்கி விபத்து ஏற்படுத்திய பாலமுருகனை காவல் நிலையத்திற்கும், அடிபட்ட நால்வரையும் சங்கராபுரம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர்.அதனைத் தொடர்ந்து பாலமுருகன் என்பவர் குடிபோதையில் வாகனத்தை இயக்கியதாக காவல்துறையினர் வழக்கு பதிந்து விசாரணை செய்து வருகிறனர்.

காரை மது போதையில் இயக்கி பொதுமக்கள் மேல் இடித்து விபத்தை ஏற்படுத்திய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Tags:    

Similar News