நாகர்கோவில் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் பிரம்மாண்ட சமபந்தி விருந்து
Update: 2023-11-26 04:53 GMT
குமரி மாவட்டம் நாகர்கோவில் கிறிஸ்து நகர் கிறிஸ்து அரசர் ஆலயத்தில் குடும்ப விழா திருக்கொடியேற்றம் மற்றும் திருப்பலியுடன் தொடங்கியது. இரவு சமபந்தி விருந்து நடைபெற்றது. இதை பங்கு பணியாளர் டோனி ஜெரோம் தொடங்கி வைத்தார். இந்த சமபந்தி விருந்தில் 10,000-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கிறிஸ்து அரசர் தேர் பவனி நடைபெற்றது. இன்று (26-ந்தேதி) 10-ம் நாள் திருவிழாவான காலை கிறிஸ்து அரசர் பெருவிழா திருப்பலியும், ஆயர் நசரேத் சூசை மறையுரையும் நடக்கிறது. தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நன்றி திருப்பலி நடைபெறுகிறது. இரவு கிறிஸ்து அரசர் கலை குழுவினர் வழங்கும் கண்கவர் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.