இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி மயங்கி விழுந்து பலி
சேலம் மாவட்டம், தேவூர் மேட்டுகடை பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற கூலி தொழிலாளி தவறி விழுந்து பலியான சம்பவம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சேலம் மாவட்டம், சங்ககிரி வட்டத்திற்குட்பட்ட தேவூர் மேட்டுகடை பகுதியை சேர்ந்தவர் வெள்ளிங்கிரி என்கிற சொக்கப்பன்(32) கட்டிட தொழிலாளி , இவருக்கு மனைவி தாமரை(25) மற்றும் 3 வயதில் ஒரு மகன் உள்ளனர், இந்நிலையில் இன்று மாலை வெள்ளிங்கிரி மோட்டார் சைக்கிளில் தேவூரில் இருந்து குமாரபாளையம் நோக்கி சென்றுள்ளார் அப்போது புள்ளாக்கவுண்டம்பட்டி புதூர் வழியாக சென்ற போது சுட்டெரிக்கும் வெயிலால் மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே வேகமாக விழுந்ததில் பலத்த அடிபட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தேவூர் போலீசார் வழக்கு பதிவு செய்து பிரேதத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் கட்டுமான தொழிலாளி வெள்ளிங்கிரி மோட்டார் சைக்கிளில் இருந்து நிலை தடுமாறி கீழே வேகமாக சாய்ந்து பலியான சம்பவம் அறிந்த குடும்பத்தினர் உறவினர்கள் கதறி அழுத சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.