மோட்டார் பழுதை சரிசெய்ய சென்ற மெக்கானிக் கிணற்றில் தவறி விழுந்து பலி

ஓடையூரில் மின் மோட்டாரை பழுது பார்க்கும் போது கிணற்றில் தவறி விழுந்து மெக்கானிக் உயிரிழந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Update: 2024-07-04 06:51 GMT

பைல் படம் 

கரூர் மாவட்டம், வாங்கல் கிழக்கு அருகில் உள்ள ஓடையூர் பகுதியைச் சேர்ந்தவர் கந்தசாமி வயது 56. இவர் ஜூன் 30 ஆம் தேதி மாலை 4:30 மணி அளவில், ஓடையூரில் உள்ள சிவானந்தம் என்பவரது தோட்டத்தில் உள்ள கிணற்றில் பழுதான மோட்டாரை பழுது நீக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராத விதமாக கிணற்றில் தவறி விழுந்தார். உடனடியாக தோட்டத்தில் பணியாற்றும் சக தொழிலாளர்கள், கிணற்றில் இறங்கி கந்தசாமியை மீட்னர். மேலும், அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் இறந்து விட்டதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் அறிந்த கந்தசாமியின் மனைவி செல்லம்மாள்  காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த கந்தசாமியின் உடலை, உடற்கூறு ஆய்வுக்காக கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வாங்கல் காவல்துறையினர்.
Tags:    

Similar News