தோட்டத்தில் கோழி மேய்ந்த தகராறில் ஒருவர் வெட்டி கொலை

தூத்துக்குடி சாயர்புரம் அருகே தோட்டத்தில் கோழி மேய்ந்த தகராறில் ஒருவா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு;

Update: 2024-01-24 06:58 GMT

தூத்துக்குடி சாயர்புரம் அருகே தோட்டத்தில் கோழி மேய்ந்த தகராறில் ஒருவா் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தால் பரபரப்பு

தூத்துக்குடி சாயர்புரம்அருகே தோட்டத்தில் கோழி மேய்ந்ததால் ஏற்பட்ட தகராறில் பக்கத்து வீட்டுக்காரரான சம்பத் செல்வ குமாரை தந்தை ஜெய பாண்டியன் மற்றும் மகன் மாரிமுத்து ஆகியோர் சேர்ந்து வெட்டி கொலை செய்த சம்பவத்தால் பரபரப்பு தூத்துக்குடி அருகேயுள்ள சேர்வைக்காரன் மடம் கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் சம்பத் செல்வகுமார் (60). இவர்களது எதிர்வீட்டில் வசிப்பவர் ஜெயபாண்டி (67) இவர் வீட்டில் கோழி வளர்த்து வருகிறார் ஜெயபாண்டி வளர்த்து வந்த கோழி சம்பத் செல்வகுமார் வீட்டு பகுதியில் உள்ள தோட்டத்தில் மேய்ந்ததால் இருவருக்கும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த ஜெயபாண்டி மற்றும் அவரது மகன் மாரிமுத்து (36) ஆகிய இருவரும் சேர்ந்து சம்பத் செல்வகுமாரை வெட்டிக் கொலை செய்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்து சாயர்புரம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மேரி ஜெமிதா மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொலை செய்யப்பட்டவரின் உடலை மீட்டு பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News