விஷம் அருந்திய எலக்ட்ரீசியன் உயிரிழப்பு!
புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தந்தையுடன் கருத்து வேறுபாட்டால் விஷம் குடித்த மெக்கானிக் உயிரிழந்தார்.
By : King 24x7 Angel
Update: 2024-03-05 07:08 GMT
விராலிமலை: புதுக்கோட்டை மாவட்டம், அன்னவாசல் அருகே தந்தையுடனான கருத்து வேறுபாட்டால் விஷம் குடித்த மெக்கானிக் மருத்துவமனையில் உயிரிழந்தார். அன்னவாசல் அருகேயுள்ள கீழக்குறிச்சி சித்துபட்டியை சேர்ந்த சின்னப்பா மகன் சிவா (28). மெக்கானிக். இவர், கடந்த சில நாள்களாக தனது தந்தையுடன் கருத்து வேறுபாட்டில் இருந்துவந்ததாகவும், இதனால் அவர் கடும் மன அழுத்தத்தில் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் கடந்த 2ஆம் தேதி வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் சிவா விஷம் குடித்து மயங்கியுள்ளார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு, புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர் உயிரிழந்தார். புகாரின்பேரில், அன்னவாசல் போலீஸார் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனர்.