ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி 'ஏ பிளஸ்' அந்தஸ்து

ஈரோடு கலை, அறிவியல் கல்லூரி 'ஏ பிளஸ்' அந்தஸ்து பெற்றதை யடுத்து கல்லூரி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது.

Update: 2024-06-22 08:55 GMT

பாராட்டு விழாவில் கலந்து கொண்டவர்கள் 

ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், தேசியதர மதிப்பீட்டு நிறுவனத்தினர் ('நாக்), ஏப்ரல் மாதம் ஆய்வு நடத்தினர். கல்லூரியின் பல்வேறு விவரங்கள் குறித்து விரிவான ஆய்வை மேற்கொண்ட நிறுவனத்தினர் சமர்ப்பித்த அறிக்கையை ஆய்வு செய்து, ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரிக்கு 'ஏ பிளஸ்' தரத்தை வழங்கியுள்ளது.

'நாக்' நிறுவன ஆய்வில், ஈரோடு கலை மற்றும் அறிவியல் கல்லூரி 4 புள்ளிகளுக்கு 3.48 புள்ளிகளை பெற்றுள்ளது. தேசியதர மதிப்பீட்டு நிறு வனத்தின் ஆய்வுக்கு ஒத்துழைப்பு நல்கிய கல்லூரியின் முதல்வர், இயக்குநர், பேராசிரியர்கள், ஆய்வக உதவியாளர்கள்,அலுவலகப் பணியாளர்கள் மற்றும் தூய்மைப்பணியாளர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் கல்லூரி நிர்வாகம் சார்பாக நன்றி நவிலும் விழா, கல்லூரி வளாகத்தில் நடந்தது.

கல்லூரி முதல்வர் சங்கரசுப்ர மணியன் வரவேற்றார். கல்லூரியின் இயக்குநர் வெங்கடாசலம் முன்னுரையாற்றினார். திமுதலியார் எஜுகேஷனல் டிரஸ்டின் தலைவர் வி.ராஜமாணிக்கம் தலைமை யுரையாற்றினார்.

கல்லூரியின் செயலர் மற்றும் தாளாளர் கே.கே.பாலுசாமி யாற்றினார். எஜுகேஷனல் பொருளாளர் சிறப்புரை தி முதலியார் டிரஸ்டின் ஏ.விஜயகுமார் வாழ்த்துரை வழங்கினார். கல்லூரி நிர்வாகம் சார்பில் ஆசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் அனைவருக்கும் நினைவுப்பரிசு வழங்கப்பட்டது. ஒருங்கிணைப்பாளர் ஜெயசுதா ஏற்புரை வழங்கினார்.

Tags:    

Similar News