ஏலகிரியில் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு

ஏலகிரி மலையில் பல்வேறு இடங்களில் மாவட்ட ஆட்சியர் மற்றும் சட்டமன்ற மதிப்பீட்டு குழுவினர் ஆய்வு மேற்கொண்டனர்.

Update: 2024-02-16 07:57 GMT
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலையில் உள்ள அர்த்தனாவூர் துவக்கப் பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டம் குறித்து திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் மற்றும் சட்டமன்ற மதிப்பீட்டு குழு ஆய்வு குழுவினர் அன்பழகன், சேவூர் ராமச்சந்திரன், பரந்தாமன், எஸ்எஸ் மணியன் ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.    அதேபோல் பழங்குடியினர் உண்டு உறைவிட பள்ளி, பழங்குடியினருக்காக புதிதாக கட்டப்பட்டு வரும் வீடுகள் கட்டும் பணிகள், ஆகியவற்றை நேரில் சென்று பார்வையிட்ட ஆய்வு மேற்கொண்டனர். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் வளர்மதி மற்றும் அரசு துணைச் சார்ந்த அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News