சேலம் பழைய பஸ்நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர்
சேலம் பழைய பஸ்நிலையத்தில் செல்போன் திருடிய வாலிபர். மக்கள் தர்ம அடி போலீசார் மீட்டு விசாரணை.
Update: 2024-04-12 06:16 GMT
சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்தவர் வெற்றிவேல். இவர், நேற்று இரவு 8.30 மணியளவில் பழைய பஸ் நிலையத்தில் இருந்து காந்தி சிலை பகுதிக்கு நடந்து சென்றார். அப்போது, அவரை ஒரு வாலிபர் பின்தொடர்ந்து வந்துள்ளார். பின்னர் அந்த வாலிபர் வெற்றிவேல் கையில் வைத்திருந்த செல்போனை பறித்துக்கொண்டு தப்பி ஓட முயன்றார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் திருடன், திருடன் என கூச்சலிட்டு செல்போனை திருடிக்கொண்டு ஓடிய வாலிபரை பிடிக்க முயன்றார். அப்போது, அங்கு நின்று கொண்டிருந்த பொதுமக்கள் அந்த வாலிபரை சுற்றிவளைத்து பிடித்து தர்மஅடி கொடுத்தனர். இதையடுத்து அந்த வாலிபரின் கை மற்றும் காலை கயிற்றால் கட்டிப்போட்டு இதுபற்றி டவுன் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் அங்கு வந்து அந்த வாலிபரை மீட்டு விசாரித்தனர். அதில், கிச்சிப்பாளையம் நாராயணநகர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (வயது 28) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை டவுன் போலீஸ் நிலையத்திற்கு போலீசார் அழைத்து சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.