எஸ்.ஆா்.பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது
பள்ளி வளாகம் முழுவதும் மாணவர்கள் மரம் நட்டனர்
Update: 2023-12-08 05:58 GMT
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே சுரண்டை எஸ்.ஆா். எக்ஸலன்ஸ் பள்ளியில் மரம் நடும் விழா நடைபெற்றது. இந்த விழாவுக்கு பள்ளி நிா்வாகி சிவபபிஸ்ராம் தலைமை வகித்தாா். செயலா் சிவடிப்ஜினிஸ்ராம் முன்னிலை வகித்தாா். பள்ளி வளாகம் முழுவதும் மழலையா் பிரிவு மாணவா்கள் மரக்கன்றுகளை நட்டனா். அவா்களுக்கு மரங்களின் அவசியம் குறித்து பள்ளி முதல்வா் பொன் மனோன்யா விழிப்புணர்வு எடுத்துரைத்தாா். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான பள்ளி மாணவ மாணவிகளும் ஆசிரியர்களும் கலந்து கொண்டனர்.