திண்டுக்கல்லில் தானாக தீப்பிடித்து எரிந்த இருசக்கர வாகனம்

திண்டுக்கல்லில் தானாக தீப்பிடித்து இருசக்கர வாகனம் எரிந்தது.

Update: 2024-01-16 14:00 GMT

தீப்பிடித்த பைக்

திண்டுக்கல் ரவுண்டு ரோடு ஒன்றரை கிலோ மீட்டர் சுற்றளவு உள்ளது.மாலை நேரங்களில் ஏராளமான பொதுமக்கள் கூடி நின்று பொழுதைக் கழிப்பதற்கும் இந்த இடம் ஏற்றதாக உள்ளது. இந்நிலையில் இன்று பொங்கல் என்பதால் ரவுண்ட் ரோடு பகுதியில் கூட்டம் குறைவாக இருந்தது.

இந்நிலையில் பைக் ஸ்டார்ட் செய்த போது திடீரென தீப்பிடித்து. கொழுந்து விட்டு எரிந்ததால் பொதுமக்கள் நாளா பக்கமும் சிதறி ஓடினர். ஒரு வழியாக அங்கிருந்த இளைஞர்கள் தண்ணீரை ஊற்றி பைக்கை தீயில் இருந்து காப்பாற்றினர். இருந்தபோதும் பைக் எரிந்து நாசமானது. பைக்கில் ஸ்டார்ட் செய்யும் வயர், பெட்ரோல் டேங்க் வயர் இரண்டும் உரசியதால் தீப்பிடித்ததாக டூவீலர் மெக்கானிக்கல் கூறினர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Tags:    

Similar News