மின்னணு வாக்கு சாதனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வாகனம்
மின்னணு வாக்கு சாதனம் குறித்து விழிப்புணர்வு
Update: 2024-01-25 11:37 GMT
ஈரோடு மாவட்டஙாட்சியர் அலுவலகத்தில் தேசிய வாக்காளர் தின உறுதிமொழி ஏற்பு விழா மாவட்ட ஆட்சியர் ராஜகோபால் சுன்கரா தலைமையில் நடைபெற்றது. தேர்தல் ஆணையத்தின் சார்பில், வாக்காளர்கள் பட்டியலை சரிசெய்து, பட்டியலை சிறப்பாக செம்மைபடுத்திய பணிக்காக நமது ஈரோடு மாவட்டத்திற்கு விருது கிடைத்துள்ளதாக தெரிவித்தார். இளம் வாக்காளர்களுக்கு மின்னணு வாக்காளர் அட்டையினை வழங்கி, மூன்றாம் பாலின வாக்காளர்கள் மற்றும் மாவட்ட அடையாளமாக தேர்ந்தெடுக்கப்பட்ட நபர்கள் ஆகியோருக்கு. மாவட்ட ஆட்சியர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். அதனைத் தொடர்ந்து, தேசிய வாக்காளர் தினத்தினை முன்னிட்டு வாக்களிப்பதின் அவசியம் குறித்து பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. பொதுமக்களிடையே மின்னணு வாக்கு சாதனம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டமன்ற தொகுதிகளுக்கும், 8 நடமாடும் தேர்தல் விழிப்புணர்வு வாகனங்களை துவக்கி வைத்தார்.