வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை
வயிற்று வலியால் அவதிப்பட்ட பெண் விரக்தியில் விஷம் குடித்து தற்கொலை - காவல்துறை வழக்கு பதிவு.
Update: 2024-02-17 11:20 GMT
கரூர் மாவட்டம் வெள்ளியணை காவல் எல்லைக்குட்பட்ட சின்ன மூக்கணாங்குருச்சி, விஜயபுரம் அருகே உள்ள மணல் தோட்டம் பகுதியைச் சேர்ந்தவர் சிவக்குமா,ர் மனைவி சித்ரா, வயது 37. சித்ராவிற்கு கடந்த மூன்று வருடங்களாக வைற்று வலி இருந்து வந்தது. இதற்காக பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை மேற்கொண்டும் சித்ராவிற்கு வயிற்று வலி நிற்கவில்லை. இதனால், விரத்தியில் வாழ்ந்து வந்த சித்ரா, பிப்ரவரி 16ஆம் தேதி நள்ளிரவு 12 :40- மணி அளவில் வயிற்று வலி தாங்க முடியாமல் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். தனது மனைவி இறந்தது குறித்து அறிந்த சிவக்குமார், இது குறித்து வெள்ளியணை காவல்துறையினருக்கு அளித்த புகாரின் பேரில், சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற காவல்துறையினர், உயிரிழந்த சித்ராவின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக, கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை சவக்கிடங்குக்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வெள்ளியணை காவல்துறையினர்.