உளுந்தூர்பேட்டையில் கைக்குழந்தையுடன் பெண் தர்ணா

உளுந்தூர்பேட்டையில் கைக்குழந்தையுடன் பெண் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-07-01 09:20 GMT

தர்ணாவில் ஈடுபட்ட பெண்

உளுந்துார்பேட்டை, அண்ணா நகர் பகுதியைச் சேர்ந்தவர் பிரபு என்கிற பாரதிதாசன், 37; அதே பகுதியைச் சேர்ந்தவர் சரவணன், 38; இருவருக்கும் இடையே ஏற்பட்ட பெண் தொடர்பான தகராறில் 17ம் தேதி தாக்கிக் கொண்டனர்.

இது குறித்து இருவரும் உளுந்துார்பேட்டை போலீசில் புகார் அளித்தனர். ஆனால் பாரதிதாசன் கொடுத்த புகாரின் பேரில் மட்டும் போலீசார் வழக்குப் பதிந்தனர். இந்நிலையில், நேற்று காலை பாரதிதாசன், சரவணன் இருவரையும் போலீசார், காவல் நிலையம் அழைத்து விசாரித்தனர்.

அதில், பாரதிதாசனை வெளியே அனுப்பி விட்டு, சரவணனிடம் மட்டும் விசாரணை நடத்தினர். இதனையறிந்த சரவணனின் மனைவி சவுமியா, 33; அரசியல் கட்சி பிரமுகர்களின் உதவியோடு பாரதிதாசனை அனுப்பி விட்டனர்.

எனது கணவர் சரவணனிடம் ஒருதலைபட்சமாக விசாரணை நடத்துகின்றனர் எனக் கூறி காலை 11:30 மணியளவில் காவல் நிலைய நுழைவு வாயில் முன்பு கைக்குழந்தையுடன் தரையில் அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார்.

இதனால், அங்கு பரபரப்பு நிலவியது. போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து 12:00 மணியளவில் தர்ணாவை கைவிட்டார்.

Tags:    

Similar News