போக்சோ வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது
சேலத்தில் போக்சோ வழக்கில் தலைமறைவான வாலிபர் கைது செய்து போலீசார் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
Update: 2024-03-05 04:46 GMT
சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் பகுதியை சேர்ந்தவர் அரவிந்த் (வயது 25). இவர் கடந்த 2023-ம் ஆண்டு 16 வயது சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்து உள்ளார். இது குறித்து சிறுமியின் பெற்றோர் காரிப்பட்டி போலீசில் புகார் கொடுத்தனர். அதன்பேரில் வாலிபர் மீது போக்சோ பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். தகவல் தெரிந்து தலைமறைவானவரை போலீசார் தேடி வந்தனர். ஆனால் கிடைக்கவில்லை. நேற்று பெத்தநாயக்கன்பாளையம் பகுதியில் பதுங்கி இருந்த அரவிந்தை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.