செருவாவிடுதி கிராமத்தில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம்
செருவாவிடுதி கிராமத்தில் மண்புழு உரம் தயாரிப்பு குறித்து செயல் விளக்கம் அளிக்கப்பட்டது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி வட்டாரத்தில் உள்ள செருவாவிடுதி கிராமத்தில், விவசாயிகளுக்கு மண்புழு உரம் தயாரித்தல் குறித்து புதுக்கோட்டை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் விளக்கம் அளித்தனர்.
மண்புழு உரம் பயன்படுத்துவதன் நன்மை பற்றியும் அதனை தயாரிக்கும் முறை பற்றியும் எடுத்துரைத்தனர். மேலும் விவசாயின் நிலத்தில் மண்புழு உரம் உருவாக்கும் தொட்டியமைத்து அதில் தொழு உரம், தென்னை நார், காய்ந்த சரகு, போன்றவற்றை அடுக்கி ஒவ்வொரு அடுக்கும் சாண கரைசல் மற்றும் தண்ணீர் தெளித்து வந்தனர்.
பிறகு மூன்று நாட்கள் கழித்து மண்புழுக்களை அதில் விட்டனர். இத்தொட்டி மிகவும் பயனுள்ளதாக இருந்தது" என விவசாயிகள் தெரிவித்தனர். இத்தொட்டியை புஷ்கரம் வேளாண் அறிவியல் கல்லூரி இறுதி ஆண்டு மாணவர்கள் முத்து ஈஸ்வரன், ஹர்சத், கௌசிக், கலை தேவா, கலையரசன், கார்த்திக், கார்த்திகேயன், கிருபாகரன், மதன், மனோஜ், மனோஜ் குமார், முகிலன் ஆகியோர் அமைத்துக் கொடுத்தனர்.