சமூக வலைதளத்தில் தவறான தகவல் பதிவிட்டால் நடவடிக்கை : எஸ்பி

தூத்துக்குடி மாவட்டத்தில் காவல் நிலைய புகார் மனு விசாரணை  குறித்து சமூக வலைதளத்தில் தவறான தகவலை பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார். 

Update: 2024-05-06 08:48 GMT

எஸ்பி பாலாஜி சரவணன்

தூத்துக்குடி  மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் எல். பாலாஜி சரவணன்  வெளியிட்ட செய்திக்குறிப்பில்,  தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த ஒருவர் தனது மனைவிக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை காரணமாக தூத்துக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகார் மனு சம்பந்தமாக சமூக வலைதளங்களில் பல்வேறு வதந்திகள் பரப்பப்பட்டு வருகிறது.

மேற்படி புகார் மனுவில் பாதிக்கப்பட்டதாக கூறப்படுபவர் சிறுமி என்பதாலும் மேலும் இது கணவன், மனைவி மற்றும் அவர்களுடைய உறவினர்களுக்கிடையே ஏற்பட்ட பிரச்சனை சம்பந்தப்பட்டது என்பதாலும் இது சம்பந்தமாக காவல் துணைக் கண்காணிப்பாளர் தலைமையில் குழந்தைகள் நல குழுமம் (Child Welfar Committee) மற்றும் பெண் காவல் ஆய்வாளர் ஆகியோர்கள் அடங்கிய குழுவை கொண்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

மேற்படி மனு மீதான விசாரணையின் உண்மைத்தன்மை தெரியாமல் அதுகுறித்து சமூக வலைதளங்களில் தவறான தகவலை பதிவிட வேண்டாம் எனவும் மீறி பதிவிட்டால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News