அரசுப்பள்ளிகளில் மாணவர் சேர்க்கை திருவிழா

ஏத்தாப்பூரில் அரசு நடுநிலைப்பள்ளியில் நடந்த மாணவர் சேர்க்கை திருவிழாவில், புதிதாக சேர்ந்த மாணவர்களுக்கு கிரீடம், மாலை அணிவித்து எழுதுப்பொருட்கள் வழங்கப்பட்டன.;

Update: 2024-03-05 09:10 GMT
 சேலம் மாவட்டம், ஆத்தூர் அருகே பெத்தநாயக்கன்பாளையம் வட்டாரம், ஏத்தாப்பூர், ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அரசு பள்ளியில் புதிய மாணவர் சேர்க்கை விழா தலைமை ஆசிரியர் ஜெயக்குமார் தலைமையில் வட்டாரக்கல்வி அலுவலர்கள் ஜெயலட்சுமி,கலாவதி முன்னிலை வகித்தனர். சேலம், மாவட்ட கல்வி அலுவலர்( தொடக்கக்கல்வி) சந்தோஷ் முன்னிலையில் ஏத்தாப்பூர், ஓலப்பாடி,பெத்தநாயக்கன்பாளையம், படையாச்சியூர்,கல்லேரிப்பட்டி,புத்திரகவுண்டம்பாளையம்,அபிநவம்,புத்திரகவுண்டம்பாளையம் காலனி ஆகிய பள்ளிகளைச்சேர்ந்த 60 க்கும் மேற்பட்ட புதிதாக ஒன்றாம் வகுப்பு சேரும் மாணவர்களுக்கு மாலை ,கிரீடம் அணிவித்து எழுது பொருள்கள் அளித்து வரவேற்றார்.மேலும் அரசுப்பள்ளிகளில் 53 வகையான மாணவர் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன.இதனை பெற்றோர் பயன்படுத்தி தங்கள் குழந்தைகளை அரசுப்பள்ளியில் சேர்த்து பயன்பெற வேண்டும் என கூறினார். நிகழ்வில் பள்ளி மேலாண்மை க்குழுத்தலைவர் சத்யா,அருகில் உள்ள பள்ளியின் தலைமை ஆசிரியர்கள்,ஆசிரியர்கள்,இல்லம் தேடிக்கல்வி வட்டார ஆசிரியர் ஒருங்கிணைப்பாளர் ஜோசப் ராஜ் மற்றும் தன்னார்வலர்கள்,பெற்றோர்கள்,ஊர் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.இறுதியாக பள்ளியின் பட்டதாரி ஆசிரியர் பாண்டியன் நன்றி கூறினார்.

Similar News