அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளர் நியமனம்

அதிமுக வழக்கறிஞர் அணி மாநில துணை செயலாளராக நியமனம் செய்யப்பட்டுள்ள அஸ்தம்பட்டி சரவணன் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து வாழ்த்து பெற்றார்.

Update: 2024-02-08 01:51 GMT

வாழ்த்து  பெற்ற நிர்வாகி 

அ.தி.மு.க. மாநில வக்கீல் அணி துணை செயலாளராக அஸ்தம்பட்டியை சேர்ந்த வக்கீல் சரவணன் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர், அ.தி.மு.க. பொதுச்செயலாளரும், முன்னாள் முதல்- அமைச்சருமான எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது மாநில செயலாளர் இன்பதுரை, சேலம் மாநகர் மாவட்ட வக்கீல் அணி பிரிவு செயலாளர் வீரக்குமார், புறநகர் மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சித்தன் ஆகியோர் உடன் இருந்தனர். மாநில வக்கீல் அணி துணை செயலாளராக நியமிக்கப்பட்டுள்ள சரவணன், அ.தி.மு.க.வில் 25 ஆண்டுகளாக வக்கீலாக இருந்து வருகிறார். அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் அரசு வக்கீலாக இருந்தவர், மத்திய கூட்டுறவு வங்கியின் இயக்குனராகவும் பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News