வயல்வெளியில் வேலை செய்து வாக்கு சேகரித்த அதிமுக வேட்பாளர்

ஆம்பூரில் வயல்வெளியில் வரப்பு வெட்டி, நிலத்திற்கு நீர் பாய்ச்சியும், உருது மொழியில் பேசியும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார் அதிமுக வேட்பாளர்.

Update: 2024-04-01 09:58 GMT

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில் வயல்வெளியில் வரப்பு வெட்டி, நிலத்திற்கு நீர் பாய்ச்சியும், உருது மொழியில் பேசியும், தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்ட அதிமுக வேட்பாளர் நாடாளுமன்ற தேர்தலில் வேலூர் மக்களவைத்தொகுதியில் அதிமுக சார்பில் மருத்துவர் பசுபதி போட்டியிடுகிறார்..

இந்நிலையில் அதிமுக வேட்பாளர் மருத்துவர் பசுபதி இன்று திருப்பத்தூர் மாவட்டம். ஆம்பூர் அடுத்த மலைகிராமமான, நாயக்கனேரி, பனங்காட்டேரி, காமனூர்தட்டு மலைகிராம மக்களிடையே தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுப்பட்டார்.. அப்பொழுது காமனூர் தட்டு பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் வரப்பு வெட்டியும், நிலத்திற்க்கும் நீர் பாய்ச்சியும் பொதுமக்களிடையே வாக்குசேகரித்தார்.. அதனை தொடர்ந்து ஆம்பூர் நகர் பகுதிகளான,பி- கஸ்பா, காதர்பேட், மோட்டுக்கொள்ளை, கிருஷ்ணாபுரம், கன்னிகாபுரம், சான்றோர்குப்பம் ஆகிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுப்பட்டார்..

மேலும் அதிமுக வேட்பாளருக்கு பி- கஸ்பா பகுதியில் பொதுமக்கள் மலர் தூவி கும்பகலசத்தை அளித்து வரவேற்றனர், அதனை தொடர்ந்து ஆம்பூரில் இஸ்லாமியர்கள் வசிக்கும் இடங்களில் அதிமுக வேட்பாளர் பசுபதி உருது மொழியில் பேசியும் தீவிரமாக வாக்கு சேகரித்தார்.. இதில் அதிமுக நிர்வாகிகள் அதன் கூட்டணி கட்சி தொண்டர்கள் கலந்து கொண்டனர்...

Tags:    

Similar News