முதியோர் இல்லத்தில் உணவு வழங்கிய அதிமுகவினர்
அதிமுக பொது செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு ஆதரவற்ற முதியோர் இல்லத்தில் அதிமுகவினர் உணவு வழங்கினர்.;
Update: 2024-05-17 04:23 GMT
உணவு வழங்கல்
தமிழக முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமியின் 70வது பிறந்த நாள் விழா நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா தலைமையில் நடைபெற்று வருகின்றது. இதனை முன்னிட்டு நேற்று (மே 16) இரவு பாளையங்கோட்டையில் உள்ள ஆதரவற்ற முதியோர்கள் இல்லத்தில் இரவு உணவு வழங்கப்பட்டது. இதில் அதிமுக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்.