அரசு பேருந்துகளில் மாணவர்கள் சாகச பயணம்: போலீசார் அறிவுரை

மாணவர்கள் சாகச பயணம்

Update: 2023-11-09 08:55 GMT
இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

திருவள்ளூர் மாவட்டம், திருத்தணியில் இங்கு வரும் அரசினர் கலைக் கல்லூரி மற்றும் டாக்டர் ராதாகிருஷ்ணன் அரசினர் மேல்நிலைப்பள்ளி ஆகிய இடங்களில் கல்வி கற்பதற்காக திருத்தணி சுற்றியுள்ள கிராமங்களில் இருந்து தினந்தோறும் ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் பேருந்துகள் மூலம் திருத்தணிக்கு வந்து செல்கின்றனர்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்கள் அரசு பேருந்துகளில் படியில் தொங்கிய வாரும் ஜன்னல்கள் பிடித்து தொங்கிய வாழும் மேற்கூறையில் ஏறி ஆபத்தான நிலையில் சாகச பயணம் மேற்கொண்டு வருகின்றனர் போலீசார் மற்றும் போக்குவரத்து துறையினர் பலமுறை எச்சரித்தும் மாணவர்கள் சாகச பயணத்தை கைவிடாமல் இருந்தனர்.

இந்த நிலையில் திருவள்ளூர் மாவட்ட எஸ்பி சீபாஸ் கல்யாண் உத்தரவின் பெயரில் திருத்தணி இன்ஸ்பெக்டர் மார்ட்டின் பிரேம்ராஜ் எஸ் ஐ ராக்கி குமாரி மற்றும் போலீசார் திருத்தணி கமலஹா தியேட்டர் புத்தூர் ரோடு பைபாஸ் சாலை மேல் திருத்தணி முருக்கம்பட்டு கேஜி கண்டிகை உள்பட எட்டு இடங்களில் அரசு பஸ்ஸில் சாகசம் பயணம் செய்யும் மாணவர்களை பஸ்ஸிலிருந்து இறக்கி போலீசார் எச்சரித்தும் இதுபோல் தொடர்ந்து பேருந்துகளில் சாகச பயணம் செய்தால் மாணவர்கள் ஆகிய உங்கள் மீது வழக்கு பதியப்படும் அவ்வாறு வழக்கு பதியப்பட்டால் உங்களுக்கு அரசு வேலை கிடைக்காது எனவே மாணவர்கள் இனி வருங்காலம் பேருந்துகளில் தொங்கியபடி பயணம் செய்வதை தவிர்க்க வேண்டும் எனவும் போலீசார் அறிவுறுத்தி அனுப்பினார்.

Tags:    

Similar News