வாக்கு எண்ணிக்கை மையத்தில் முகவர்கள் ஆர்ப்பாட்டம்

வாக்கு எண்ணிக்கை மையத்தில், காலை உணவு பற்றாக்குறையால் முகவர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2024-06-04 06:32 GMT

பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில், காலை உணவு பற்றாக்குறை முகவர்கள் ஆர்ப்பாட்டம், நாம் தமிழர் கட்சி முகவர் மயக்கம். பெரம்பலூர் சுற்றுச்சாலை பகுதியில் உள்ள ஆலோ பப்ளிக் பள்ளியில், பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதி வாக்கு என்னும் பனி ஜூன் 4ம் தேதி இன்று துவங்கியது, காலை 8 மணிக்கு தபால் வாக்குகளும் அதனை தொடர்ந்து காலை 8:30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு, எந்திரங்கள் வாக்குப்பதிவு எண்ணிக்கை தொடங்கியது.

இதில் முன்னதாக காலை 6 மணி முதல் முகவர்கள் வாக்கு எண்ணிக்கை மையத்திற்கு உள்ளே அனுமதிக்கப்பட்ட நிலையில், சரியான நேரத்திற்கு உணவு வழங்கப்படவில்லை என்றும் காலை உணவு பற்றாக்குறையாக உள்ளது என்றும் முகவர்கள் திடீர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இதில் நாம் தமிழர் கட்சியை சேர்ந்த முகவர் வெங்கடேசன் என்பவர் மயக்கம் அடைந்த நிலையில் அவருக்கு அங்கிருந்த 108 ஆம்புலன்ஸில் உடனடி சிகிச்சை அளிக்கப்பட்டது இது குறித்து தேர்தல் நடத்தும் அலுவலரும் மாவட்ட ஆட்சியரு மான கற்பகம் முகவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்தி, உணவு வழங்க ஏற்பாடு செய்தார். இதனை தொடர்ந்து வாக்கு என்னும் பணிகள் தொடங்கி நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News