சூரமங்கலம் பகுதி அதிமுக பூத் கமிட்டி கூட்டம்
Update: 2023-11-30 01:51 GMT
ஆலோசனை கூட்டம்
சேலம் மாநகர் மாவட்ட சூரமங்கலம் பகுதி அ.தி.மு.க. சார்பில் நாடாளுமன்ற தேர்தலையொட்டி 21-வது வார்டு வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் புதுரோடு பகுதியில் நேற்று மாலை நடந்தது. மாவட்ட அவைத்தலைவர் பன்னீர்செல்வம் தலைமை தாங்கினார். அ.தி.மு.க. அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாநில செயலாளர் சங்கரதாஸ், மாவட்ட பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர் மாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில், மாநகர் மாவட்ட செயலாளர் வெங்கடாஜலம் கலந்து கொண்டு பேசும்போது, நாடாளுமன்ற தேர்தல் விரைவில் நடைபெற உள்ளதால் அதற்கு வாக்குச்சாவடி முகவர்களின் பணியானது மிகவும் முக்கியானது. கடந்த 10 ஆண்டுகளாக அ.தி.மு.க. ஆட்சியில் செய்த சாதனைகளை மக்களிடம் எடுத்துக்கூறி ஆதரவு திரட்ட வேண்டும், என்றார். இந்த கூட்டத்தில், மாநகர் மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் சரவணமணி, துணை செயலாளர் தங்கராஜ், வார்டு கவுன்சிலர் ஜனார்த்தணன், மாவட்ட விவசாய அணி செயலாளர் சங்கர், 21-வது வார்டு செயலாளர் மாதேஸ் உள்பட வாக்குச்சாவடி முகவர்கள் பலர் கலந்து கொண்டனர். முன்னதாக நாடாளுமன்ற தேர்தலின்போது, வாக்குச்சாவடி முகவர்கள் எவ்வாறு பணியாற்றுவது என்பது குறித்து விளக்கம் அளிக்கப்பட்டது.