மாநகராட்சி கூட்டத்தை புறக்கணித்த அதிமுக மாமன்ற உறுப்பினர்கள்
ஈரோடு மாநகராட்சின் மாமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.;
Update: 2024-06-29 03:03 GMT

ஈரோடு மாநகராட்சின் மாமன்ற உறுப்பினர்களின் கூட்டத்தை அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் புறக்கணித்தனர்.
ஈரோடு மாநகராட்சின் மாமன்ற உறுப்பினர்களின் சாதாரண கூட்டம் மேயர் நாகரத்தினம் சுப்பிரமணி தலைமையில் மாநகராட்சி அலுவலகத்தில் மாமன்ற கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு சம்பவத்தில் தமிழக அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்து வந்த அதிமுக கவுன்சிலர்கள், கூட்டத்தின் போது கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய விற்பனை தடுக்க தவறியதால் 65க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளை தடுக்க தவறியதாக குற்றம்சாட்டி அதிமுக மாநகராட்சி எதிர்க்கட்சி தலைவர் தங்கமுத்து தலைமையில் அதிமுக கவுன்சிலர்கள் வெளிநடப்பு செய்தனர். அப்போது தமிழக அரசை கண்டித்து கோஷங்களையும் எழுப்பினர்.