தென்காசி தொகுதிக்கு அதிமுக முன்னாள் அமைச்சர் விருப்ப மனு
தென்காசி தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட விருப்ப மனு அளித்திருந்த முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி வேட்பாளர் நேர்காணலில் கலந்து கொண்டார்.
Update: 2024-03-12 06:23 GMT
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவிலை சேர்ந்த முன்னாள் அமைச்சரும் அதிமுக தலைமை செயற்குழு உறுப்பினருமான ராஜலட்சுமி வரும் நடைபெற இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தென்காசி தொகுதியில் அதிமுக வேட்பாளராக போட்டியிட்ட விண்ணப்பம் செய்திருந்தார். இந்நிலையில் நேற்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையில் நடந்த அதிமுக வேட்பாளருக்கான நேர்காணலில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் ஏராளமான அதிமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் உடன் இருந்தனர்.