எய்ம்ஸ் மருத்துவ: மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எடப்பாடியாரை அழைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்-எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி.*;

Update: 2024-05-12 13:50 GMT

எம்எல்ஏ ராஜன் செல்லப்பா

மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை தொடர்பாக எடப்பாடியாரை அழைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்துவோம்-எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி. மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முறைப்படி கட்டிடப் பணிகள் துவங்கவும்,

நிர்வாகத்தை முறைப்படுத்தவும் அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து போராட்டத்தை நடத்துவோம். -எம்எல்ஏ ராஜன் செல்லப்பா பேட்டி முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிச்சாமி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு திருப்பரங்குன்றம் 16 கால் மண்டபம் அருகே பொதுமக்களுக்கு பிரியாணி விருந்து நடைபெற்றது.

Advertisement

இந்நிகழ்ச்சியை திருப்பரங்குன்றம் சட்டமன்ற உறுப்பினர் ராஜன் செல்லப்பா தொடங்கி வைத்தார். தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த எம்எல்ஏ ராஜன் செல்லப்பா கூறுகையில்: மதுரையில் காவல் ஆய்வாளர் வீட்டில் திருட்டு சம்பவம் நடைபெற்றது குறித்த கேள்விக்கு: அரசும், காவல்துறை அதிகாரிகளும் கவனம் செலுத்தாத காரணத்தால் நிலமை மோசமாக சென்று கொண்டிருக்கிறது.

இந்த அரசு இளைஞர்கள் மீது கவனம் செலுத்தாத காரணத்தால் போதைப் பழக்கத்தை கட்டுப்படுத்துகிற முயற்சியில் அவர்கள் ஈடுபடவில்லை. அதனால் இது போன்ற சம்பவங்கள் அவர்கள் இல்லங்களிலும் நடைபெறுகிறது.

மதுரை மாநகராட்சி நிர்வாகம் குறித்த கேள்விக்கு: இந்த மாநகராட்சி நிர்வாகம் எந்த திட்டங்களை கொண்டு வந்துள்ளது வெள்ளைக்கல் குப்பை கிடங்கில் தீ பற்றி எரிகிறது, அதை அகற்றுவதற்கு இந்த நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை. ரோப்கார் திட்டத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது ஆனால் முயற்சிகள் நடைபெறவில்லை. *மொத்தத்தில் இந்த மாநகராட்சி மோசமான சூழ்நிலையில் உள்ளது சிறு மழையை கூட தாங்க முடியவில்லை.

மத்திய மாநில அரசுகளிடம் இருந்து இந்த மாநகராட்சி எந்த நிதியையும் பெறவில்லை. மதுரை எய்ம்ஸ் குறித்த கேள்விக்கு: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை முறைப்படி கட்டிடப் பணிகள் துவங்கவும், நிர்வாகத்தை முறைப்படுத்தவும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. இடம் ஒதுக்கியும் பணிகள் நடைபெறாமல் இருந்தால் அது நிர்வாக சீர்கேடு தான். எனவே அதிமுக சார்பாக எடப்பாடி பழனிச்சாமியை அழைத்து போராட்டத்தை நடத்துவோம்.

Tags:    

Similar News