அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை செயல்வீரர்கள் கூட்டம்
பேராவூரணியில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை, தஞ்சை தெற்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமன விழா நடைபெற்றது.
தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தனியார் திருமண அரங்கில் அகில இந்திய ராஜகுலத்தோர் பேரவை, தஞ்சாவூர் தெற்கு மாவட்டச் செயல்வீரர்கள் கூட்டம் மற்றும் புதிய பொறுப்பாளர்கள் நியமன விழா நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, அமைப்பின் நிறுவனர் தலைவர் முனைவர் எம்.கே. வெங்கடேஷ் குமார் தலைமை வகித்தார். இதில், மாநில முதன்மைச் செயலாளர் சிவக்குமார், மாநில பொருளாளர் அருண்ராஜ், மாநில துணைப் பொருளாளர் பன்னீர்செல்வம், மாநில மகளிர் அணி தலைவி உஷா, மாவட்ட நிர்வாகிகள் சதீஷ்குமார், இணை பொது செயலாளர் முருகேசன், மாநில நிர்வாகிகள் கலியமூர்த்தி, நல்லதம்பி, பன்னீர்செல்வம், மாநில கொள்கை பரப்புச் செயலாளர் வி.எம்.டி தமிழ்ச்செல்வன் உள்ளிட்டோர் கலந்து கொண்டு பேசினர்.
இதில், மாவட்ட செயலாளராக எல்.எம்.ஆறுமுகம், மாவட்ட பொருளாளராக என்.ரவிகுமார், மாவட்ட அவைத்தலைவராக எஸ்.சுந்தர்ராசு, மாவட்ட துணைச் செயலாளர்களாக ஆர் நீலமோகன், என்.ரவி, துரைராஜ் மற்றும் ஒன்றிய, நகர நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
கூட்டத்தில், "ராஜகுல என்ற சாதியை, ராஜ குலத்தோர் என பெயர் மாற்றி தர வேண்டும். ராஜகுலத்தோர் சமூகத்திற்கு உரிய இட ஒதுக்கீட்டை வழங்க வேண்டும். இதனை வலியுறுத்தி சென்னையில் 26 ஆம் தேதி நடைபெற உள்ள கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பெருந்திரளானோர் கலந்து கொள்வது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
முன்னதாக, அண்ணா சிலையிலிருந்து விழா நடைபெற்ற மண்டபம் வரை நூற்றுக்கணக்கானோர் ஊர்வலமாக சென்று கலந்து கொண்டனர்.