அதிகாலை உபதேச காட்சியுடன் அனைத்து திருமஞ்சனத்தில் உள்ளார் நிறைவு!
ஆனி திருமஞ்சன திருவிழா திருவாவாடுதுறை 24 வது குருமாக கணேஷ்தானம் அம்பலவான பரமாச்சாரியார் சுவாமிகள் அருளானைப்படி கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது .
ஆவுடையார் கோவிலில் மாணிக்கவாசகரால் கட்டப்பட்ட திருவாவடுதுறை ஆதீனத்துக்கு சொந்தமான பழமையான ஆத்மநாத சுவாமி கோயில் உள்ளது. இந்த கோயிலில் ஆனி திருமஞ்சன திருவிழா திருவாவாடுதுறை 24 வது குருமாக கணேஷ்தானம் அம்பலவான பரமாச்சாரியார் சுவாமிகள் அருளானைப்படி கடந்த இரண்டாம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது . முக்கிய நிகழ்ச்சி ஆனி தேரோட்டம் கடந்து பத்தாம் தேதி காலை நடந்தது.
இதில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு வடம் பிடித்து தேர் இழுத்தனர். முக்கிய விழா திருவாசகம் பிறந்த வரலாறு தொடர்புடைய அதிகாலை உபதேச காட்சி அறக்கட்டளை தம்பிரான் சங்கரலிங்க சுவாமிகள் முன்னிலையில் நடந்தது முன்னதாக ஆத்மநாதர் யோகா பிக குருந்த மூலத்திற்கு சிறப்பு அபிஷேகங்கள் செய்யப்பட்டன.
உபதேச காட்சியுடன் ஆனி திருமஞ்சனவிலா நிறைவு பெற்றது. விழா ஏற்பாடுகளை தென் மண்டல மேற்பார்வையாளர் முத்து கிருஷ்ணன் கோயிலின் கண்காணிப்பாளர் சுப்ரமணியன் கதிரேசன் ஆகியோர் செய்திருந்தன.