அருணாசலப்பேரியில் அம்மன் கோயில் திருவிழா
தென்காசி மாவட்டம், வடக்குவாசெல்வி அம்மன் கோயிலில் நடைபெற்ற திருவிழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
Update: 2024-01-24 03:00 GMT
தென்காசி மாவட்டம், ஆலங்குளம் அருகேயுள்ள வடக்குவாசெல்வி அம்மன் கோயில் திருவிழா நடைபெற்றது. இவ்விழாவையொட்டி திரளான பக்தா்கள் விரதமிருந்தனா். தொடக்க நிகழ்ச்சி நெட்டூா் அப்புரானந்தசுவாமி திருக்கோயிலில் தொடங்கியது. அப்போது, விரதமிருந்த பக்தா்கள் திரளானோா் அலகு குத்தி வழிபாடு செய்தனா். கணபதி பாண்டியன் என்ற பக்தா் தனது முதுகில் கொக்கிகளை பொருத்தி பறவைக் காவடி எடுத்து நோ்த்திக்கடன் செலுத்தினாா். நெட்டூரில் தொடங்கிய பறவைக் காவடி ஊா்வலம், 5 கி.மீ. தொலைவிலுள்ள அருணாசலப்பேரி அம்மன் கோயில் வரை சென்றது. தொடா்ந்து, அங்கு வடக்குவாசெல்வி அம்மனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், அன்னதானம், இரவு சுவாமிகள் பூக்குழி இறங்குதல் ஆகியவை நடைபெற்றன.