போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி!

திருப்பூர், பாண்டியன் நகர் பகுதியில் சர்வதேச போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2024-06-27 13:25 GMT

சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினம் நேற்று நாடு முழுவதும் அனுசரிக்கப்பட்டது. அதனை முன்னிட்டு திருப்பூர் பாண்டியன் நகர் பகுதியில் மாநகர போலீஸ் கமிஷனர் பிரவீன் குமார் அபிநபு வழிகாட்டுதலின்படி அனுப்பர்பாளையம் சரக காவல் உதவி கமிஷனர் நல்லசிவம் தலைமையில் போதைப்பொருள் ஒழிப்பு தின விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இதில் போதையால் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதிலிருந்து மீள்வது குறித்து மருத்துவர்கள் மற்றும் மறுவாழ்வு மைய நிர்வாகிகளைக் கொண்டு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.

மேற்படி விழிப்புணர்வு கூட்டத்தில் ஏற்கனவே   குடி போதைக்கு அடிமையாகி அதிலிருந்து மீண்டு வந்த சுமார் 15 நபர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு விழிப்புணர் ஏற்படுத்தப்பட்டது. மேலும் பொதுமக்கள் தங்கள் பகுதிகளில் ஏதேனும் சட்ட விரோதமான போதைப் பொருள் நடமாட்டம் மற்றும் விற்பனை குறித்த தகவல்களை காவல் நிலையத்திற்கு தெரியப்படுத்தலாம் மேற்படி விவரங்கள் ரகசியமாக காக்கப்படும் எனவும், உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என காவலர்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் அனுப்பர்பாளையம் போலீஸ் இன்ஸ்பெக்டர் லதா , திருமுருகன் பூண்டி இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் , அனுப்பர்பாளையம் காவல் நிலைய சப் இன்ஸ்பெக்டர் செல்லதுரை , திருமுருகன்பூண்டி சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்கள் மகாதேவன் , ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியின் இறுதியாக சர்வதேச போதை பொருள் ஒழிப்பு தினத்தை முன்னிட்டு உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags:    

Similar News