வந்தவாசி அருகே கட்டிலில் இருந்து தவறி விழுந்த முதியவர் பலி

Update: 2023-11-26 08:46 GMT

உயிரிழப்பு 

இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…
 தி.மலை மாவட்டம், வந்தவாசி அடுத்த கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அரசு 70, பக்கவாத நோய் காரணமாக கடந்த 2 வருடங்களாக மருந்து மாத்திரை உட்கொண்டு நடக்க முடியாத நிலையில் இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் கடந்த 18ந் தேதி அன்று கட்டிலில் உறங்கிக் கொண்டிருந்த அரசு தவறி கீழே விழுந்துள்ளார். உறவினர்கள் மீட்டு வந்தவாசி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இந்தசம்பவம் குறித்து அவரது மகன் செந்தில் கொடுத்த புகாரின் பேரில் கீழ்கொடுங்காலூர் போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Tags:    

Similar News