ஆவுடையார் கோவிலில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம்!

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவிலில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.

Update: 2024-07-13 11:47 GMT

திருத்தேரோட்டம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட ஆவுடையார் கோவிலில் ஆனி மாத திருமஞ்சன திருத்தேரோட்டம்ஏராளமான பக்தர்கள் வடம் பிடித்து இழுத்து சுவாமி தரிசனம் செய்தனர்.  திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான பிரசித்திபெற்ற ஆவுடையார்கோவில் என அழைக்கப்படும் திருப்பெருந் துறை ஆத்மநாத சுவாமி ஆலயத் தில் ஆனி திருமஞ்சன மாணிக்க வாசகர் திருவிழா கடந்த 2ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

திருவிழாவில் தினமும் காலை, மாலை இருவேளையும் மாணிக்கவாசகர் வெவ்வேறு வாகனங்களில் வீதி உலாவந்தார் அதில் ஏழாம் திருவி ழாவில் இரவு குருத்தோலை சப்பரத்தில் வெள்ளி இடப வாகனத்தில் சிவபெருமான் அலங்கரத்தில் மாணிக்கவாசகர் சுவாமி வீதி உலாவந்தார் திரு விழாவின் முக்கிய நிகழ்சியாக ஒன்பதாம் நாள் நிகழ்ச்சியாக திருத்தேரோட்டம் நேற்று காலை 10 மணியளவில் ஆத்மநாதசுவாமி கோயில் முன்தேரோட்டம் புறப்பட்டு நான்கு ரதவீதிகளிலும் சுற்றி வந்தது. முன்தாக காலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் மாணிக் கவாசர். தேரில் எழுத்தருளினார்.

காலை 10 மணியளவில் தேர் சக்கரத்தில் முக்கிய பிரமுகர்கள் தேங்காய் உடைத்தனர். பின்னர் ஆவுடையார் கோவில் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் இருந்து வந்த ஏராளமான வர்கள் தேர் வடம்பிடித்து இழுத்தனர் தேர் வடம்பிடித்து இழுக்கும்போது பக்தர்கள் ஆத்மநாத, மாணிக்கவாசகா என்று கூறி தேரை இழுத்தனர். தேரோட்டம் மேலதாளங்கள் முழங்க தேர் நான்கு ரதவீதிகளிலும் ஆடி அசைந்து வந்தது.

தேரோட்டத்தில் சிவாச்சாரியார்கள் ஏராளமான வர்கள் கலந்துகொண்டு வழிநெடுகிழிலும் பக்தர்களுக்கு அர்ச்சனைகள் அர்ச்சனைகள் செய்தனர். தேரோட்டத்தில் 10 நாள்.திருவிழாவில் வியாழக் கிழமை இரவுவெள்ளி ரதத்தில் மாணிக்கவாசகர் வீதி உலா நடைபெறும். தொடந்து வெள்ளிக்கிழமை அதிகாலை 5 மணிக்கு மேல் 6 மணிக்குள் சிவபெருமான் மாணிக்க வாசகருக்கு உபதேசித்தருளிய உபதேச காட்சி நடைபெற உள்ளது.

Tags:    

Similar News