சின்னசேலம் கோவில்களில் அன்னக்கொடி விழா
கள்ளக்குறிச்சி மாவட்டம், சின்னசேலம் கோவில்களில் அன்னக்கொடி விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.;
Update: 2024-05-08 06:26 GMT
அன்னக்கொடி விழா
சின்னசேலம் அடுத்த ராயப்பனுார் காமாட்சி அம்பிகை உடனுறை கைலாசநாதர் கோவிலில் சித்திரை அமாவாசையை முன்னிட்டு அன்னக்கொடி விழா நடந்தது. விழாவையொட்டி நேற்று காலை, மூலவர் மற்றும் உற்சவ மூர்த்திகளுக்கு சிறப்பு அபிேஷகம் மற்றும் அலங்காரம் நடந்தது. 9:00 மணியளவில் பிச்சாண்டி அலங்காரத்தில் சுவாமி வீதியுலா நடந்தது.
இரவு 11:00 மணியளவில் ரிஷிப வாகனத்தில் திருக்கயிலாய காட்சிக்கு புறப்படும் ஐதீக நிகழ்ச்சி நடந்தது. கிராம மக்கள் பலர் சுவாமி தரிசனம் செய்தனர். அதேபோல் சின்னசேலம் அடுத்த தென்பொன்பரப்பி சொர்ணபுரீஸ்வரர் கோவிலிலும் அன்னக்கொடி விழா நடந்தது. விழாவில் மழை மற்றும் மக்கள் நலன் வேண்டி மூலவருக்கு சிறப்பு பூஜை நடந்தது.