கோட்டை பெருமாள் கோவிலில் வருடாபிஷேக விழா
தர்மபுரி கோட்டை பரவாசுதேவ கோயிலில் வருடாபிஷேக விழா நடந்தது;
By : King 24X7 News (B)
Update: 2024-02-10 17:31 GMT
சிறப்பு அலங்காரம்
தர்மபுரி கோட்டை பரவாசுதேவ சுவாமி கோயிலில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி 10ம் தேதி கும்பாபிஷேகம் நடந்தது. இதையெட்டி கோயிலல் 5ம் ஆண்டு வருஷாபிஷேக விழா நடந்தது. விழாவையொட்டி காலை 8 மணியளவில் பெருமாளுக்கு 12 வகையான பொருட்களைக் கொண்டு பால் தயிர் இளநீர் தண்ணீர் தேன் மஞ்சள் குங்குமம் விபூதி சந்தனம் போன்ற பொருட்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம் நடந்தது.
தொடர்ந்து சிறப்பு யாகமும் ஆராதனையும் நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பகல் 12 மணிக்கு அன்னதானம் நடந்தது. நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனர் உதயகுமார்,
செயல் அலுவலர் ராஜகோபால், ஸ்ரீ வாரி சேவா டிரஸ்ட் குழுவினர் செய்திருந்தனர்.