அரசு மேல்நிலைப் பள்ளியில் ஆண்டு விழா
சூனாம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.;
By : King 24x7 Angel
Update: 2024-02-07 06:22 GMT
செங்கல்பட்டு மாவட்டம் சூனாம்பேடு அரசு மேல்நிலைப்பள்ளி ஆண்டு விழா பள்ளி வளாகத்தில் நடைபெற்றது. ஆண்டு விழாவை முன்னிட்டு மாணவ மாணவிகளுக்கு விளையாட்டுப் போட்டிகளில் நீளம் தாண்டுதல் ,குண்டெறிதல் ஓட்டப்பந்தயம் ,கைப்பந்து, கபடி போன்ற போட்டிகள் வைக்கப்பட்டது. பேச்சுப்போட்டி ,கட்டுரை போட்டி, ஓவியப்போட்டி நடத்தப்பட்டது. வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பதக்கங்களும் சான்றிதழ்களும் பரிசுகளும் வழங்கப்பட்டது. இதில் உதவி தலைமை ஆசிரியர் கே சந்திரசேகரன், மணிகண்டன் தலைமை ஆசிரியர் புவனேஸ்வரி சரத் பெற்றோர் ஆசிரியர் கழக பொருளாளர் டாக்டர் ஆர் கோபு ராஜ், முன்னாள் மாணவர் பேரவை ஒருங்கிணைப்பாளர் சு.க. விடுதலைச் செழியன்,பள்ளி மேலாண்மை குழு தலைவர் மற்றும் உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.