தமிழக அளவிலான சிறப்பு செலவுக் கணக்கு பார்வையாளர் நியமனம்
தமிழக அளவிலான சிறப்பு செலவுக் கணக்கு பார்வையாளராக BR பாலகிருஷ்ணன் நியமிக்கப்பட்டுள்ளதாக மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் முனைவர் ஜெயசீலன் தகவல் தெரிவித்துள்ளார்.;
Update: 2024-04-03 02:43 GMT
மக்களவைத் பொதுத் தேர்தல்-2024 தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் தேர்தல் செலவுக் கணக்குகளைத் தணிக்கை செய்ய, இந்திய தேர்தல் ஆணையத்தால் அனைத்து மக்களவைத் தொகுதிகளுக்கும் ஏற்கனவே தேர்தல் செலவுக் கணக்கு பார்வையாளர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ள நிலையில், தற்பொழுது .B.R..பாலகிருஷ்ணன், IRS(IT) (1983) (R) (தொடர்பு எண் : 9345298218) என்பவர் தமிழக அளவிலான சிறப்பு செலவுக் கணக்கு பார்வையாளராக நியமனம் செய்யப்பட்டுள்ளார் என மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் ஜெயசீலன் தெரிவித்துள்ளார்கள்.