ஆரல்வாய்மொழி : டீக்கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை 

ஆரல்வாய்மொழியில் டீக்கடைக்காரர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-02 05:34 GMT
பைல் படம்

கன்னியாகுமரி மாவட்டம் ஆரல்வாய்மொழி குமாரபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ரவிபாலன் (57). இவர் ம மின்வாரியத்தில் ஒப்பந்த தொழிலாளியாக  வேலை பார்த்து வந்த நிலையில், 2 வருடம் முன்பு விபத்து ஏற்பட்டதால் தற்போது டீ கடை நடத்தி வந்தார். இவருக்கு கனி என்ற மனைவியும் ஒரு மகனும் இரண்டு மககள்களும் உள்ளனர். ரவி பாலன் கடந்த சில நாட்களாக கால் வலியால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று காலையில் வீட்டின் வெளியே உள்ள மாட்டு தொழுவத்தில் ரவி பாலன் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார்.

Advertisement

இதை கண்ட குடும்பத்தினர் அவர்களை மீட்டு வடக்கன்குளத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரி கொண்டு சென்றனர். டாக்டர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.   இது குறித்த புகாரின் பேரில் அரல்வாய்மொழி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் தூக்கு போட்டு தற்கொலை செய்ததாக தெரியவந்துள்ளது.      தொடர்ந்து போலீசார் பணத்தை கைப்பற்றி குமரி அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News