ஆட்டையம்பாளையம் அருகே ரேஷன் அரிசி கடத்தியவர் கைது!

அவிநாசி, ஆட்டையம்பாளையம் மாரி 550 கிலோ ரேஷன் அரிசி கடத்தியவரை குடிமை பொருள் வழங்கழ் குற்றப்புலனாய்வு துறை போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.;

Update: 2024-06-19 06:55 GMT

 கைது

குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை ஐ.ஜி ஜோசி நிர்மல்குமார் உத்தரவு படி, எஸ்.பி.சந்திரசேகரன், டி.எஸ்.பி சுரேஷ்குமார் ஆகியோர் மேற்பார்வையில் ரேசன் அரிசி கடத்தலை தடுக்க போலீசார் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில், திருப்பூர் அவிநாசி அடுத்த ஆட்டையம்பாளையம் - அன்னூர் ரோட்டில் ரேசன் அரிசி கடத்தி வருவதாக குடிமை பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அந்த தகவல் அடிப்படையில் இன்ஸ்பெக்டர் துளசிமணி வழிகாட்டுதலில்  எஸ்.ஐ, கிருஷ்ணன், பொன்குணசேகரன்,  ஆகியோர் நேற்று  அன்னூர் ரோடு காரைக்குடி செட்டிநாடு மெஸ் அருகில் வாகன தணிக்கை மேற்கொண்டனர்.

Advertisement

அப்போது அந்த ரோட்டில் வந்த காரை நிறுத்தி சோதனை செய்த போது அதில் அரசால்  இலவசமாக வழங்கக்கூடிய 550 கிலோ ரேசன் அரிசியை கடத்தி வந்தது தெரியவந்தது. இதனை தொடர்ந்து அந்த காரை ஓட்டி வந்த  நபரிடம் போலீஸ் விசாரணை நடத்தினர். போலீசார் விசாரணையில் அவர் திருப்பூர், அவிநாசி, பெருமாநல்லூர் பகுதியை சேர்ந்த அருண்பாண்டியன் (35)என்பதும் சுற்றுவட்டார  பகுதிகளில் பொதுமக்களிடம் குறைந்த விலைக்கு ரேசன் அரிசிகளை வாங்கி கள்ளச்சந்தையில் அதிக விலைக்கு வடமாநிலத்தவர்களுக்கு விற்பனை  செய்ய காரில் கடத்தி வந்தது  தெரியவந்தது. இதனையடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து அருண்பாண்டியனை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்த 550 கிலோ ரேசன் அரிசி,  கார் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

Tags:    

Similar News