தாய் படவேட்டம்மனுக்கு அத்தி வரதர் அலங்காரம்

காஞ்சிபுரம் அய்யப்பா நகர், தாய் படவேட்டம்மன் கோவிலில், 45வது ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 14ல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது.;

Update: 2023-10-24 11:19 GMT

படவேட்டம்மன்


இந்த கிங் செய்தியை ஆடியோவாக கேட்க…

காஞ்சிபுரம் அய்யப்பா நகர், தாய் படவேட்டம்மன் கோவிலில், 45வது ஆண்டு நவராத்திரி விழா, கடந்த 14ல் மஹா கணபதி ஹோமத்துடன் துவங்கியது. தினமும் மாலையில் அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் நடந்து வருகிறது. இதில், எட்டாம் நாள் விழாவான நேற்று, கர்ப்பகிரகத்தில் மூலவர் அம்மனுக்கு கிருஷ்ணர் அலங்காரமும், அர்த்த மண்டபத்தில் உற்சவர் அம்மன், அத்திவரதர் சயனகோலம் அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் சன்னிதி தெரு, சந்தவெளியம்மன் கோவிலில் எட்டாம் நாள் உற்சவத்தில், மூலவர் சந்தவெளியம்மன், வெங்கடாஜலபதி அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

Tags:    

Similar News