ஆத்தூர் : மழை வேண்டி பெண்கள் காமட்டா திருவிழா
நரசிங்கபுரத்தில் மழை வேண்டியும், திருமண தோஷம் நீங்கவும் 50க்கும் மேற்பட்ட பெண்கள் காமட்டா பூஜை செய்தனர்.;
Update: 2024-02-20 04:14 GMT
காமட்டா பூஜையில் கலந்து கொண்டவர்கள்
சேலம் மாவட்டம் ஆத்தூர் மற்றும் நரசிங்கபுரம் சுற்றுவட்டார பகுதிகளில் கிராமத்தில் உள்ள கோவிலின் அருகில் பச்சைப் பந்தல் அமைத்து மேடைப் பகுதியில் களிமண்ணால் ஆண், பெண் உருவம் வடிவமைத்து கிராம மக்கள் மாவிளக்கு எடுத்து வந்தும் சிறப்பு பூஜை செய்தனர் இதில் 12 முதல் 15 வயது உற்பட்ட இளம் சிறுமிகள் களிமண்ணால் செய்துள்ள காமட்டா சிலைக்கு பூஜை செய்தும் இளம்பெண்கள் மற்றும் திருமணமான பெண்கள் ஒன்று சேர்ந்து குடில் அமைத்து கும்மி பாடல் பாடியபடி நடனம் ஆடுவார்கள். இரண்டாம் நாளில் அச்சிலைகளை சிறுமிகள் தலையில் சுமந்து அருகே உள்ள ஆறு நீர் நிலையில் கரைத்து விடுவது வழக்கம் இந்நிலையில் 50க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு நரசிங்கபுரம் பகுதியில் காமட்டா பூஜை செய்தனர்.இந்த பூஜையால் மழை பொழியும் திருமண பெண்களுக்கு திருமணம் நடக்கும் என்பது ஐதீகம்.