ஆத்தூர் : சரக்கு வேன் கவிழ்ந்த விபத்தில் ஒருவர் உயிரிழப்பு !
ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வட சென்னிமலை கோவிலில் கடை வைத்த வியாபாரிகள் நள்ளிரவு மினி சரக்கு வாகனத்தின் மேலே அமர்ந்து வந்து கொண்டிருந்தபோது வேன் கவிழ்ந்து படுகாயம் அடைந்த விபத்தில் ஒருவர் சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழப்பு.;
By : King 24x7 Angel
Update: 2024-03-28 04:57 GMT
மருத்துவமனை
சேலம் மாவட்டம் ஆத்தூர் அருகே காட்டுக்கோட்டை வடசென்னிமலை முருகன் கோவிலில் பங்குனி உத்திர திருவிழா முன்னிட்டு நிறைவு நாள் சத்தாபரணம் நிகழ்ச்சி நடைபெற்று முடிந்த நள்ளிரவு அங்கு கடை வைத்திருந்த சிறு வியாபாரிகள் 12 பேர் மினி சரக்கு வாகனத்தில் தங்களது பொருட்களை ஏற்றிக்கொண்டு மலையிலிருந்து கீழே இறங்கும்போது ஐந்து அடி பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 12 பேர் படுகாயம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று இருந்த நிலையில் அதில் பழனியப்பன் என்பவர் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பு. உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து போலீசார் விசாரணை.