சேலத்தில் கல்லூரி மாணவன் மீது தாக்குதல்
சேலத்தில் கல்லூரி மாணவன் மீது தாக்குதல் நடத்திய இரண்டு பேர் கைது செய்யப்பட்டனர்.
By : King 24X7 News (B)
Update: 2024-03-12 17:03 GMT
சேலம் சித்தனூர் காத்தவராயன் கோவில் பகுதியைச் சேர்ந்த கோபி மகன் அன்பு செல்வன் (வயது 18), இவர், தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வந்தார். இவர், சித்தனூர் பகுதியில் நடைபயிற்சி சென்றார். அங்கு சிலர் மது அருந்தியதாக தெரிகிறது.
இதனை அன்புசெல்வன் தட்டிக்கேட்டுள்ளார். அப்போது ஏற்பட்ட தகராறில் அவர்கள், அன்புசெல்வனை தாக்கியதாக கூறப்படுகிறது. காயம் அடைந்த அன்புசெல்வனை அக்கம் பக்கத்தினர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சித்தனூர் பகுதியை சேர்ந்த கோபி, விக்னேஷ் ஆகிய 2 பேரை கைது செய்தனர். மேலும் 3 பேரை தேடி வருகின்றனர்.